தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட 180 பேர் வேட்புமனு தாக்கல்
தென்காசி, 07 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இந்த 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 180 பேர் மனு தாக்கல் செய்துள்
Tenkasi Collector Office


தென்காசி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இந்த 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 180 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது, 4 நாட்கள் நடைபெற்ற இந்த வேட்பு மனு தாக்கலின் போது152 ஆண்கள், 28 பெண்கள் உட்பட 180 பேர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது, சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் 26 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 32 பேரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 27 ஆண்கள், 6 பெண்கள் என 33 பேரும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 32 ஆண்கள், 7 பெண்கள் என 39 பேரும், தென்காசி சட்டமன்ற தொகுதியில் 41 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 47 பேரும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 26 ஆண்கள், 3 பெண்கள் என 29 பேரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN