Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் கல் இறக்கி கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா அவரிடம் விசாரணை நடத்திய போது, கட்டையால் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை மணிகண்டன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்பாதுகாப்பிற்காக மணிகண்டனை சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா காலில் சுட்டதாக கூறப்படும் நிலையில், படுகாயம் அடைந்த மணிகண்டனை தற்போது போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டுள்ளனர்.
தென்காசி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு . அவசர சிகிச்சை பிரிவை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு போலீஸ் வந்தனர்.
பிரபல என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவும் படுகாயம் அடைந்துள்ளார்.
மருத்துவமனையில் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Hindusthan Samachar / ANANDHAN