Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 30.3.2026 அன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
அதனை தொடர்ந்து 06.042026
நேற்றோடு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சியினரும்
சுயேட்சைகளும் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் , திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது திமுக திருவண்ணாமலை
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எ.வ.வேலு பிறந்த வருடத்தில் குளறுபடி இருப்பதாக
கூறி வேட்பு மனுவை நிராகரிக்கும்படி அதிமுக மற்றும் பாஜகவினர் கடந்த
காலங்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டசபையில் பதிவான ஆதாரங்களோடு
தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான செல்வம் மற்றும் தேர்தல்
மேற்பார்வையாளரிடம் காட்டி மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தினார்.
அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பம் சத்தத்தை கேட்டு பத்திரிகையாளர்கள் உள்ளே
சென்று வீடியோ எடுக்க முற்பட்டபோது திமுகவினர் பத்திரிக்கையாளர்கள் வீடியோ
எடுக்க எப்படி அனுமதித்தீர்கள் என கோசமிட்டதால் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்திரிக்கையாளர்களை வெளியேற்றி கதவை சாற்றினார்.
பின்னர் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வேட்பமான ஏற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அதிமுகவினர் நீதிமன்றத்திற்கு சென்று முறையிட போவதாக கூறிவிட்டு சென்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் தமிழகத்தில் அமைச்சராக பதவி வகித்த ஒருவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பிறந்த ஆண்டை தவறாக குறிப்பிடுவது
சரியானதா என கேள்வி எழுப்பியவர்கள் மேலும் சட்டசபையில் பதிவு செய்யப்பட்ட
ஆதாரங்களோடு நீதிமன்றத்தை நாடா இருப்பதாகவும் உரிய தண்டனை பெற்றுத் தர
இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam