திருத்தணி முருகன் கோவிலில் விழா நாட்களில் போக்குவரத்து மாற்றம் - ஆட்டோக்களுக்கு தடை
திருவள்ளூர், 07 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவில், தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் பெருமளவிலான பக்தர்களை ஈர்த்துவருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து
திருத்தணி முருகன் கோவிலில் விழா நாட்களில் போக்குவரத்து மாற்றம் - ஆட்டோக்களுக்கு தடை


திருவள்ளூர், 07 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவில், தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் பெருமளவிலான பக்தர்களை ஈர்த்துவருகிறது.

இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தினம், வருகின்ற 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 14-ம் தேதி (தமிழ்புத்தாண்டு) ஆகிய 3 நாட்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, அந்த மூன்று நாட்களிலும் மலைக்கோவிலுக்கு மேல் ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடவசதியை கருத்தில் கொண்டு கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM