சினிமாவில் இருந்து விலகுகிறேனா? - வைரலாகும் த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு
சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.) தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. ஏராளமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த த்ரிஷா கடைசியாக தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார்.. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு ப
Trisha


Hw


சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. ஏராளமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த த்ரிஷா கடைசியாக தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார்.. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்திலும் த்ரிஷா நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக சமீப காலமாக வதந்தி பரவி வருகிறது.

த்ரிஷா சினிமாவில் இருந்து விலகி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதனால் தான் இப்போது வரை எந்த புதுப்படத்தையும் அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பரவி வரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.

அதில்,

நான் சினிமாவை விட்டுட்டேன், ஒரு பணக்கார பிஸ்னஸ்மேனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நான்கு குழந்தைகளை வளர்க்கிறேன்—அவங்களுக்கு நேத்தே இரண்டு வயசு ஆனதாம்! இன்னும் ஏதாவது சேர்க்கணுமா, இல்ல இன்று கற்பனைக் கதைகள் இதுக்குள்ளே முடிஞ்சுதா?” என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் வதந்திகளுக்கு நடிகை த்ரிஷா இப்போது வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.. த்ரிஷாவின் இந்த பதிவால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்

Hindusthan Samachar / P YUVARAJ