Enter your Email Address to subscribe to our newsletters

ஹைலகண்டி, 07 ஏப்ரல் (ஹி.ச)
அசாம் மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தின் ஹைலகண்டி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அசாமிலுள்ள 11 ஆயிரம் இளைஞர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, பயங்கரவாத செயல்களை விடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்துள்ளது.
போடோலேண்ட் மற்றும் தடை செய்யப்பட்ட உல்பா அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, அசாமை ஒரு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்ற பணியாற்றி உள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளில், அசாமை வெள்ள பாதிப்பில் இருந்து விடுவிக்கும் வகையில், பல பெரிய குளங்களை கட்ட உள்ளோம்.
ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்துவதன் வழியே மட்டுமே அசாமில் வளம் ஏற்படுத்த முடியும். அந்த வேலையை பா.ஜ.க.வால் மட்டுமே செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b