வில்லிவாக்கம் தொகுதி- குற்றச்சாட்டுகள் மத்தியில் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பு
சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும் தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவரது தேர்தல் சத்தியப்பிரமாணத்தில் வர
Aadhav


சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும் தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது தேர்தல் சத்தியப்பிரமாணத்தில் வருமானம், சொத்து மற்றும் நிறுவன விவரங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டி, அதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் எம். முரளி வினோத், 06.04.2026 அன்று தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

சட்டப்பிரிவுகள் அடிப்படையில் புகார் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (RP Act) பிரிவு 33A மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1961 (Rule 4A) ஆகியவற்றை மேற்கோள் காட்டி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், வேட்பாளர் முக்கிய தகவல்களை திட்டமிட்டு மறைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

வங்கி வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து சந்தேகம் மனுவில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி டெபாசிட்கள் மற்றும் அதனால் கிடைக்கும் வட்டி வருமானம் முழுமையாக சத்தியப்பிரமாணத்தில் வெளிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டது. குறிப்பாக, வட்டி வருமானத்தை தனியாக குறிப்பிடாமல் “Business” என மட்டும் பதிவு செய்திருப்பது தவறாகும் என கூறப்பட்டது.

மேலும், வங்கி கணக்குகள் தொடங்கிய தேதி மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களும் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

கையிருப்பு பணம் மற்றும் நிறுவன தொடர்புகள் வேட்பாளர் மற்றும் அவரது மனைவியின் கையிலேயே அதிகளவு பணம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதும், அது தேர்தல் நடைமுறைகளுக்கு முரணாக இருக்கலாம் என்ற சந்தேகமும் மனுவில் எழுப்பப்பட்டது.

அத்துடன், அவரது மனைவி தொடர்புடைய பல LLP மற்றும் தனியார் நிறுவனங்களில் பங்குதாரர்/ப்ரொமோட்டராக இருப்பதை சத்தியப்பிரமாணத்தில் குறிப்பிடவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மூன்று சத்தியப்பிரமாணங்களிலும் ஒரே குற்றச்சாட்டு 30.03.2026, 04.04.2026 மற்றும் 06.04.2026 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட சத்தியப்பிரமாணங்களிலும் இத்தகவல்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.

எதிர்ப்புகள் நிராகரிப்பு – வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்ப்புகளை பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரி, அவை வேட்புமனுவை நிராகரிக்கும் அளவிற்கு பொருந்தாது எனக் கருதி, ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை செல்லத்தக்கதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ