கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-முசாபர்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
திருப்பூர், 07 ஏப்ரல் (ஹி.ச.) கோடை விடுமுறையை முன்னிட்டும், அதிகரித்து வரும் பயணி களின் தேவையை கருத்தில் கொண்டும், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-முசாபர்பூர் (பீகார் மாநிலம் ) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்
கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-முசாபர்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்


திருப்பூர், 07 ஏப்ரல் (ஹி.ச.)

கோடை விடுமுறையை முன்னிட்டும், அதிகரித்து வரும் பயணி களின் தேவையை கருத்தில் கொண்டும், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-முசாபர்பூர் (பீகார் மாநிலம் ) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

எர்ணாகுளம்-முசாபர்பூர் (வண்டி எண்.06085) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 10, 17 மற்றும் 24-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு முசாபர்பூரை சென்றடையும்.

முசாபர்பூர்-எர்ணாகுளம் (06086) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) முசாபர்பூரில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, வியாழக் கிழமைகளில் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்ற டையும்.

மேற்கண்ட தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM