தூத்துக்குடியில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73 லட்சம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி, 07 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான க
District Collector Reports


தூத்துக்குடி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டுள்ளார்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் ரூ. 10,17,548/- மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4,64,425/- மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையில் கண்டறியப்பட்ட ரூ. 8,71,390/- மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களை முறையாகச் சமர்ப்பித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 62,62,470/- ரொக்கம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b