Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த அணியை தொடங்கி தொடர்ந்து பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.
தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.
சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேசிங் அணி 9வது இடத்தை பிடித்து அசத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து அஜித்குமார் ரேசிங் அணி ஸ்பெயினில் நடைபெற உள்ள லீ மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
ஏப்ரல் 11 மற்றும் 12ம் தேதி நடைபெறும் இந்த போட்டிக்காக அஜித்குமார் மற்றும் அவரது அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.
ஏப்ரல் 11ம் தேதி தகுதிச் சுற்று மற்றும் இரண்டு மணி நேர மெயின் போட்டியும் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ