Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திர பிரதேசம், 08 ஏப்ரல் (ஹ.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் தலைநகர் விவகாரம் மீண்டும் அரசியல் சூடுபிடித்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி முன்னாள் முதல்வர் ,
என். சந்திரபாபு நாயுடு
மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தாடேப்பள்ளிகுடேம் பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய ஜெகன்,
அமராவதி திட்டம் பொதுமக்கள் நலனுக்காக அல்ல, சிலரின் லாபத்திற்காக உருவாக்கப்பட்டதாக விமர்சித்தார்.
மாநிலத்திற்கு நிரந்தர தலைநகரை உருவாக்காமல் விடுவதே சந்திரபாபுவின் நோக்கம் என்று அவர் கூறினார்.
தலைநகர் அமைப்புக்கு ஜெகன் இரண்டு முக்கிய முன்மொழிவுகளை வெளியிட்டார்:
மூன்று தலைநகர் திட்டம்:
விசாகப்பட்டினம்– நிர்வாக தலைநகர்
கர்னூல் – நீதித்துறை தலைநகர்
அமராவதி – சட்டமன்ற தலைநகர்
மாவிகன் காரிடார் திட்டம்:
மச்சிலிபட்டணம், விஜயவாடா, ஆகிய நகரங்களை இணைக்கும் 110 கிலோமீட்டர் பகுதியை ஒரே தலைநகராக மேம்படுத்தும் திட்டம்.
அமராவதி திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி செலவிடுவதை விட, அதில் 10% செலவிலேயே “மாவிகன்” பகுதியில் சிறந்த அடிப்படை வசதிகளை உருவாக்க முடியும் என ஜெகன் விளக்கினார்.
மேலும், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் சதுர அடிக்கு சுமார் ரூ.4,500 மட்டுமே இருந்தாலும், அமராவதியில் ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி, இது பெரிய அளவிலான மோசடி என அவர் குற்றம்சாட்டினார்.
மாநில வளர்ச்சி ஒரு இடத்தில் மட்டுமே சுருங்காமல், அனைத்து பகுதிகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று ஜெகன் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA