அரசியல் என்பது மன அழுத்தம் நிறைந்த துறையாகும் -ஆந்திர முன்னாள் அமைச்சர் ஆர்.கே.ரோஜா
ஆந்திரா , 08 ஏப்ரல் (ஹ.ச.) ஒய்.எஸ்ஆர்.காங்கிரஸ் (YSRCP) கட்சியின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான ஆர்.கே ரோஜா பதவிக்காலம் முடிவடைந்தது. ஆந்திர மாநிலம் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் கட்சியினர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
A


ஆந்திரா , 08 ஏப்ரல் (ஹ.ச.)

ஒய்.எஸ்ஆர்.காங்கிரஸ் (YSRCP) கட்சியின் முன்னாள்

அமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான ஆர்.கே ரோஜா பதவிக்காலம் முடிவடைந்தது.

ஆந்திர மாநிலம் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் கட்சியினர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில்,

ஒய் எஸ் ஆர் சி பி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பேசிய ஆர் கே ரோஜா,

அரசியல் என்பது மன அழுத்தம் நிறைந்த துறையாகும்.

முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக வென்றபோது எனக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டது.

இரண்டாவது முறை வென்றபின் நீரிழிவு (சர்க்கரை நோய்) வந்தது என்று தனது உடல்நிலை குறித்து விளக்கினார்.

மேலும், கடந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஒய்.எஸ். ஜகன் மோகன் ரெட்டி தலைமையில் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை செயல்படுத்தி காட்டியதாக அவர் கூறினார்.

மக்கள் மத்தியில் இருந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் தங்களது கட்சியின் பண்பாடு என்றும் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் கூட்டணி கட்சிகளைப் போல பொய்யான வாக்குறுதிகளை வழங்க முடியாததால் தான் தோல்வி ஏற்பட்டது என்றும் அவர் விமர்சித்தார்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் மத்தியில் தைரியமாகச் செல்லும் வகையில் பணியாற்றியுள்ளனர்.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் மீண்டும் கட்சியின் வலிமையை நிரூபிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

பொய்யால் வென்றவர்களுக்கு மக்கள் தான் பாடம் புகட்டுவார்கள், தங்களது கட்சிக்கு உள்ள மக்கள் ஆதரவு மீண்டும் வெற்றியைத் தரும்.

இவ்வாறு ரோஜா பேசினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA