Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 08 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம்–வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, கடற்கரை அருகே புதிய பாலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 மூட்டைகளில் சுமார் 30 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த பீடி இலைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரைக் கண்டதும் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வாகனத்தில் தப்பி ஓடினர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தப்பியோடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam