முதல்வர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரை
திருவண்ணாமலை, 08 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3
Stalin campaigns in Tiruvannamalai today.


திருவண்ணாமலை, 08 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்த அவர் 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று முன்தினம் தொடங்கினார். நேற்று மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், இன்று

(ஏப்ரல் 08) திருவண்ணாமலை தேரடி வீதியில் கடலை கடை சந்திப்பில் இருந்து முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.

தங்கள் ஊரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஓடி வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் வரவேற்வை ஏற்றபடியே தேரடி வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது சாலையின் இருபுறங்களிலும் கூடிநின்ற பொதுமக்களிடம் திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் எ.வே.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சரை அருகில் பார்த்த உற்சாக மிகுதியில் அவருடன் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். மேலும் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்ற முதலமைச்சர் அங்கு வியாபாரிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

Hindusthan Samachar / vidya.b