சென்னையில் சாலையில் நடந்து சென்ற திருநங்கை தலையில் மின்வயர் பட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு - போலீசார் விசாரணை
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச) சென்னை பாரிமுனை அரண்மனை காரன் தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை புஷ்பா என்ற புஷ்பராஜ். நேற்று இரவு கடற்கரை ரயில் நிலையம் அருகே சாப்பிட்டு விட்டு சாலையை கடப்பதற்காக தடுப்பு சுவர் வழியாக சென்ற போது மின்விளக்கு வயர் திருநங்கை பு
Ye


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை பாரிமுனை அரண்மனை காரன் தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை புஷ்பா என்ற புஷ்பராஜ். நேற்று இரவு கடற்கரை ரயில் நிலையம் அருகே சாப்பிட்டு விட்டு சாலையை கடப்பதற்காக தடுப்பு சுவர் வழியாக சென்ற போது மின்விளக்கு வயர் திருநங்கை புஷ்பா தலையில் பட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை மின்வாரியத்தின் ஊழியர்கள் மின்கசிவு ஏற்பட்ட இடத்தில் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை கண்டு இறந்துபோன திருநங்கை புஷ்பாவின் குடும்பத்தினர் அங்கு அவர்களை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின் வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகார் அடிப்படையில் பேரில்,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ