சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர தேர்தல் பிரச்சாரம்
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வில்லிவாக்கம் தொகுதியில் வடக்கு ஜெகநாத நகர்,பாபா நகர் குடியிருப்பு பகுதிகளில் வாக்காளர்களை நேரில்
Ns


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் வடக்கு ஜெகநாத நகர்,பாபா நகர் குடியிருப்பு பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

திமுக அரசின் கடந்த ஐந்து ஆண்டுச் சாதனைகள் ,குடிநீர் திட்டங்கள், சாலை வசதிகள், பொதுமக்கள் நலத்திட்டங்கள பற்றியும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்களையும் விளக்கி வருகிறார்.

மேலும், தெருமுனைக் கூட்டங்கள், சிறிய பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர், பெண்கள் குழுக்களுடன் நேரடி கலந்துரையாடல்கள் நடத்தி, வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, நகர்ப்புற அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்ற கோரிக்கைகளை கேட்டு, அதற்கான தீர்வுகளை வழங்குவதாக உறுதி அளித்து வருகிறார்.

இதனுடன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் கார்த்திக் மோகன், வில்லிவாக்கம் தொகுதியில் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவை திரட்டும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

Hindusthan Samachar / P YUVARAJ