Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் போதே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மேற்கு வங்க காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
அதிகாரிகள் மாற்றத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், புதுடெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரை டெரெக் ஓ பிரையன் தலைமையில் திரிணமூல் எம்பிக்கள் இன்று (ஏப்ரல் 08) சந்தித்தனர்.
இந்த சந்திப்பு முடிந்தவுடன், திரிணமூல் காங்கிரஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக,இந்திய தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் இன்று தெரிவித்திருப்பதாவது:
திரிணாமுல் காங்கிரஸுக்குத் தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கை
இம்முறை மேற்கு வங்கத் தேர்தல்கள்:
பயமற்றவை,
வன்முறையற்றவை,
மிரட்டலற்றவை,
சலுகை ஆசை காட்டாதவை,
சோதனைகளற்றவை,
நெரிசலற்ற வாக்குச்சாவடிகள் — என்பதாக நிச்சயமாக அமையும்.
திரிணாமுல் காங்கிரஸிடம் தேர்தல் ஆணையத்தின் நேரடியான அறிவுறுத்தல்
இம்முறை மேற்கு வங்கத் தேர்தல்கள் நிச்சயமாகப் பின்வருமாறு அமையும்:
பயமற்றவை,
வன்முறையற்றவை,
மிரட்டலற்றவை,
சலுகை ஆசை காட்டாதவை,
நெரிசலற்ற வாக்குச்சாவடிகள்,
மேலும் எவ்விதச் சோதனைகளோ அற்றவை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b