தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி, 08 ஏப்ரல் (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருநெல்வேலியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். இ
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு


தூத்துக்குடி, 08 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருநெல்வேலியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்கு வாகைகுளம் விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் பிற்பகல் 1 மணி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் கே.டி.சி. நகர் வழியாக, தூத்துக்குடி செல்கிறார்.

மாலை 3 மணி முதல் கழகத் தலைவர், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி (Road Show) நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும்,போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b