தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கட
ஹி.ச


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடன் முடிவடைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 7,600 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடந்த நிலையில், இதில் 4,994 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை (ஏப்ரல் 9) வெளியாக இருக்கிறது. பல தொகுதிகளில் சில வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை (ஏப்ரல் 9) கடைசி நாளாகும்.

இறுதி வாக்காளர் பட்டியலுடன் துணை பட்டியலை இணைத்து புதிய வாக்காளர் பட்டியலை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இது, கடந்த இறுதி வேட்பாளர் பட்டியலைவிட 6 லட்சத்து 35 ஆயிரத்து 911 வாக்காளர்களை கூடுதலாக கொண்டதாக உள்ளது.

தற்போதைய புதிய பட்டியலில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

இந்த பட்டியல்தான் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த பட்டியல்தான், அரசியல் கட்சிகளுக்கும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும், வாக்குச்சாவடிகளில் அனுமதிக்கப்படும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் அளிக்கப்படும்.

Hindusthan Samachar / vidya.b