ஒரு கிராம் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.14 ஆயிரத்தை தாண்டியதால் ஷாக்..! - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.) பெண்களின் விருப்ப ஆபரணமாகவும் சேமிப்பின் அடையாளமாகவும் திகழும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்ற சூழலில், தங்கம் வெள்ளி விலை ஏற்றம் மற
தங்கம்


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

பெண்களின் விருப்ப ஆபரணமாகவும் சேமிப்பின் அடையாளமாகவும் திகழும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்ற சூழலில், தங்கம் வெள்ளி விலை ஏற்றம் மறக்கமாகவே இருந்து வருகிறது.

பெரும்பாலும் தங்கம், வெள்ளி விலையானது உயர்ந்து கொண்டே செல்வது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கம் விலை நேற்று முன் தினம் ஒரே நாளில் 2 முறை மாற்றம் செய்யப்பட்டது.

காலையில் குறைந்த தங்கம் விலை மீண்டும் மாலையில் அதிரடியாக உயர்ந்தது. இதையடுத்து நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 13,860க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 8ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 340 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,200க்கும், சவரனுக்கு ரூ.2,720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,860க்கும் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P