தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம்
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் நியமனம் செய்யபட்டு
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம்


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் நியமனம் செய்யபட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

சாய்குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர், நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் .

அதேபோல தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

உத்தரவை உடனே அமல்படுத்தி பணியில் சேர்ந்தது குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

1995 பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் மிட்டல் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b