Enter your Email Address to subscribe to our newsletters

இந்தியா , 08 ஏப்ரல் (ஹ.ச.)
ஈரானிலிருந்து சீனாவுக்கு செல்ல இருந்த ஒரு பெரிய மூல எண்ணெய் கப்பல் திடீரென தனது பயண திசையை மாற்றி இந்தியா நோக்கி திரும்பியுள்ளது.
இந்த தகவலை லண்டன் ஸ்டாக் எக்சேஞ்ச் குழுமம் (LSEG) வெளியிட்ட கப்பல் போக்குவரத்து தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
‘ஜயா’ என்ற இந்த மிகப்பெரிய எண்ணெய் டாங்கர், ஆரம்பத்தில் சீனாவை இலக்காகக் கொண்டு பயணித்தது.
ஆனால் பின்னர் திடீரென தனது பாதையை மாற்றி இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இந்த கப்பல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்துக்குச் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனுடன், ‘ஜோர்டான்’ என்ற மற்றொரு எண்ணெய் கப்பலும் இந்தியா நோக்கி வருகிறது என கப்பல் கண்காணிப்பு தரவுகள் கூறுகின்றன.
அமெரிக்கா, இரானின் மூல எண்ணெய் மீது விதித்திருந்த தடைகள் காரணமாக 2019ஆம் ஆண்டிலிருந்து இந்தியா அந்த நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது.
தற்போது அந்த தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ரிபைனரிகள் மீண்டும் இரானிலிருந்து எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
இந்த சூழ்நிலையில், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரானின் மூல எண்ணெய் மீண்டும் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கிடையில், ‘பிங் ஷுன்’ என்ற மற்றொரு கப்பல் முன்பு இந்தியா நோக்கி வந்த நிலையில், பின்னர் தனது பயணத்தை சீனாவுக்கு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA