கோவையில் திமுக பத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் - கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை
கோவை, 08 ஏப்ரல் (ஹி.ச.) கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர்கள பேரவையினர் கூட்டணி வைத்துள்ளதாகவு
Kongu Vellalar Peravai


கோவை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அதில்,

கடந்த 2021-ம் ஆண்டு முதல் திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர்கள பேரவையினர் கூட்டணி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து திமுக கூட்டணியை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.

இலவச மின்சாரம்,இட ஒதுக்கீடு, தீரன் சினமலைக்கு சிலை, உக்கடம் மேம்பாலத்திற்கு தங்கள் மூத்த தலைவர் சுப்ரமணியத்தின் பெயர் கொங்கு வேளாளகவுண்டர் சமுதாயத்திற்கு தொடர்ந்து நலத்திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்தனர்.

செந்தில்பாலாஜி பொறுப்பேற்று கோவை வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் கோவைக்குக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மேம்பாலங்கள் 80 சதவீதங்களுக்கு மேல் நிதி ஒதுக்கி திட்டத்தை துவக்கி வைத்தது, சின்னியம்பாளையம் வரை மேம்பாலம் நீட்டிபது தொடர்பான அறிவிப்பு, மருதமலையில் லிப்ட் வசதி, ஹாக்கி மைதானம், தங்கநகை பூங்கா, சாலை பணிகள், செம்மொழிப்பூங்கா உள்ளிட்ட ஏராளமானமா திட்டங்கள் கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து பேசிய பேரவையினர், செந்தில்பாலாஜி, கோவையில் அமைச்சராக இருந்தால் இதுபோன்ற பல திட்டங்களை கொண்டு வரமுடியும் எனவும் சென்னைக்கு அடுத்த தலைநகராக கோவை அப்போதுதான் மாறும்,மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் அதற்காக திமுக கூட்டணியை ஆதரிப்பதோடு, கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வீடுவீடாக தங்களது அமைப்பினர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை திமுக கோட்டையாக இருந்தது, இடையில் சிறிது இடைவெளி ஏற்ப்பட்டது, ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மீண்டும் திமுக கோட்டையாக மாறி உள்ளது.

கோவையில் கொங்கு வேளாளக்கவுண்ர்கள் மற்றும் அருந்ததியினரையிம் இணக்கமாக அரவணைத்து செல்லும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும், கோவையின் பெரும்பான்மை சமூகத்தினர் ஆதரவு உள்ளதால் திமுக பத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

எங்கள் சமுதாயமாக இருந்தாலும் எடப்பாடி பழனி்ச்சாமி கொங்கு வேளாளக்கவுண்ர்கள் சமுதாயத்திற்கு என்ன செய்தார் என கேள்வியெழுப்பியவர் எதாவது செய்திருப்பதாக குறிப்பிட்டால் பார்க்கலாம்.

கோவையில் செந்தில்பாலாஜி பொறுபேற்ற பிறகு கோவை மாறி இருப்பதாவும், அனைவருக்குமான தலைவராக, எளிதில் அணுக்ககூடிய தலைவராக செந்தில்பாலாஜி உள்ளதாகவும் தெரிவித்த கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினர் கோவையில் திமுக ஆட்சியமைந்த பிறகு, பெரியார் அறிவுலகம்,மருத்துவமனை மேம்பாடு,மேட்டுபாளையம் சாலையில் மேம்பாலம், அவிநாசி சாலையில் மேம்பாலம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,விவசாயிகளுக்காக பம்பு வழங்குவது தொடர்பான தேர்தல் அறிக்கைக்கு கோவையில் உள்ள பம்பு செட் உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அத்திகடவு அவினாசி திட்டத்தை முதலில் தொடங்க வைத்தது கருணாநிதிதான், இறுதிகட்டதான நிதியையும் ஒதுக்குவார் எனவும் கோவை விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுத்த விவசாயிகளுக்கு நிதியை விடுவித்தது திமுக அரசு என தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN