Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 08 ஏப்ரல் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இச்சிறுமி கடந்த 5 ஆம் தேதி கிராமத்தின் வீதியில் விளையாட்டி கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சிறுமியை சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளான்.
குருபரப்பள்ளி கிராமத்தின் ஒதுக்கு புறத்தில் முதர்மண்டி கிடந்த பகுதிக்கு அழைத்து சென்ற 9 ஆம் வகுப்பு மாணவன், 7 வயது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் கூறப்படுகிறது.
அத்தோடு இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் மிரட்டி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு மாணவனின் மிரட்டலுக்கு பயந்து போன சிறுமி வீட்டிற்கு சென்று எதையும் சொல்லாமல் அமைதியாக இருந்ததாக தெரிகிறது.
பின்னர் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதில் பதறிப்போன பெற்றோர் சிறுமியை உடனடியாக
மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் 9 ஆம் வகுப்பு மாணவனை போக்சோவில் கைது செய்துள்ளனர்.
வீதியில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை 9 ஆம் வகுப்பு மாணவர் சாக்லெட்
தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam