மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனுத் தாக்கல்
பவானிபூர், 08 ஏப்ரல் (ஹி.ச.) 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வேட்புமனுத் தாக்கல்


பவானிபூர், 08 ஏப்ரல் (ஹி.ச.)

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாகத் தேர்தல் நடைபெறும் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மமதா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் மம்தா போட்டியிட்ட நிலையில், நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

இந்த முறை பவானிபூர் தொகுதியில் மமதா போட்டியிடும் நிலையில், சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b