தே.மு.தி.க-வில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவிப்பு
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.) மீசை ராஜேந்திரன் தேமுதிக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர், மறைந்த விஜயகாந்த் அவர்களின் தீவிர ஆதரவாளராகவும், கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வந்தார். கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் போட்டி
மீசை ராஜேந்திரன்


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

மீசை ராஜேந்திரன் தேமுதிக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர், மறைந்த விஜயகாந்த் அவர்களின் தீவிர ஆதரவாளராகவும், கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்ட மீசை ராஜேந்திரன், வரவிருக்கும் 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, மீசை ராஜேந்திரன்,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,

அதில், தன்னை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளும், தேமுதிகவில் 21 ஆண்டுகளும் பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சூழ்நிலையில் இந்த ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam