Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியியலாளர் மெல்வின் எல்லிஸ் கால்வின் 1911ஆம் ஆண்டு ஏப்ரல் 8 -ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் செயின்ட் பால் நகரில் பிறந்தார்.
இவர் 1931ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம் என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இவரது ஆராய்ச்சிப் பயணம் தொடங்கியது.
இவர் ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியோருடன் இணைந்து கண்டறிந்தார்.
இதற்கு கால்வின் சுழற்சி என்று பெயரிடப்பட்டது.
ஒளிச்சேர்க்கை குறித்த இந்த ஆராய்ச்சிக்காக கால்வினுக்கு 1961ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வாழ்நாள் இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த கால்வின் 1997ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J