Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 08 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை தொடங்கிய கச்சகுடா புதிய ரயில் சேவைக்கு பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பயணிகள் நல சங்கத் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே.லெட்சுமணன் துணைத் தலைவர் எஸ் அந்தோணி முத்துராஜா, நிர்வாகச் செயலாளர் ஜே.ஏ.என். ஆனந்தன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி - கச்சகுடா
(வண்டி எண் 17616): ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 07:40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 13:25 மணிக்கு கச்சகுடாவை சென்றடையும்.
இதுபோல் கச்சகுடா - தூத்துக்குடி (17615): மறுமார்க்கமாக, கச்சகுடாவில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 19:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 22:30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
இந்த நிலையில் இந்த புதிய ரயில் சேவை, தென் தமிழக மக்களுக்கும் ஹைதராபாத் செல்லும் பயணிகளுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b