மாம்பழம் சின்னம் முடக்கம் கோரி வழக்கு -அவசர விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.) மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக தலைமை நீதிபதி அமர்வில் இன்று வைக்கப்பட்டது. வழக்கை இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று ர
Anbumani


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அவசர வழக்காக தலைமை நீதிபதி அமர்வில் இன்று வைக்கப்பட்டது.

வழக்கை இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு வலியுறுத்தியது.

தேர்தல் சூழ்நிலை நிலவுவதால் உடனடி விசாரணை அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், மனு இன்னும் முறையாக எண்ணிடப்படாத நிலையில் இருப்பதால் அதை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியது.

நடைமுறைப்படி மனு எண்ணிடப்பட்டு பதிவாகிய பின்னரே விசாரணைக்கு வரும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், அவசர விசாரணை கோரிக்கையை ஏற்க தேவையான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் அமர்வு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நேற்றைய தினமும் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் மீண்டும் அவசர விசாரணை கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாம்பழம் சின்னம் தொடர்பான சட்டப்போராட்டம் தொடரும் நிலையில், மனு எண்ணிடப்பட்ட பிறகு வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ