சீமானின் வேட்புமனு பிரமாணப் பத்திரம் அதிக அளவில் பதிவிறக்கம்
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில், சீமான் தாக்கல் செய்த தேர்தல் வேட்புமனு பிரமாணப் பத்திரம் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட
Seeman


Ns


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளன.

அந்த வகையில், சீமான் தாக்கல் செய்த தேர்தல் வேட்புமனு பிரமாணப் பத்திரம் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சீமானின் பிரமாணப் பத்திரம் இதுவரை 21 லட்சத்து 17 ஆயிரத்து 958 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் தொடர்பான தரவுகள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், கல்வித் தகுதி, வழக்குகள் உள்ளிட்ட தகவல்களை அறிய பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதன் வெளிப்பாடாக இந்த எண்ணிக்கை பார்க்கப்படுகிறது.

இதேபோல்,தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி தலைவர் விஜயின் வேட்புமனு பிரமாணப் பத்திரமும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரது பிரமாணப் பத்திரத்தை சுமார் 4 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் வேட்பாளர்களின் தகவல்களை பொதுமக்கள் நேரடியாக அணுகும் சூழல் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பான வெளிப்படைத்தன்மை மீதான விழிப்புணர்வு உயர்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

மேலும், முக்கிய வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் மீது பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்திருப்பது, இந்த தேர்தல் மீதான எதிர்பார்ப்பையும் அரசியல் சூழ்நிலையின் தீவிரத்தையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ