குளச்சல் தொகுதியில் பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
கன்னியாகுமரி, 08 ஏப்ரல் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்றைய தினம் கன்
Nainar


கன்னியாகுமரி, 08 ஏப்ரல் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பாஜக நிர்வாகிகள், சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பூத் செயற்பாட்டாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட முக்கியமான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியை பாஜக வசப்படுத்துவதும், பாரத பிரதமர் மோடி வழிகாட்டுதலுடன் நம் வெற்றி வேட்பாளர் T சிவகுமார் அவர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்வதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டும்.

மேலும், வாக்காளர் தொடர்பு பணிகளை வலுப்படுத்துதல், அடிப்படை செயற்பாடுகளை தீவிரப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு பூத் நிலையிலும் வெற்றி உறுதி செய்யும் வகையில் செயல்திட்டங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், குளச்சல் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வெற்றி வேட்பாளர் T சிவகுமார் அவர்கள் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபுகுமார் அவர்கள் கலந்து கொண்டு, செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமும் வழிகாட்டுதலும் வழங்கினர் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN