Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 08 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சென்னை முதல் தூத்துக்குடி வரை சிறப்பு ரயிலை இயக்க உள்ளது.
இந்த சிறப்பு ரயில் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். வழியிலான முக்கிய நிலையங்களாக சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தம் வழங்கப்படுகிறது.
இதேபோல், திரும்பும் பயணமாக தூத்துக்குடியில் இருந்து ஏப்ரல் 14-ஆம் தேதி புறப்படும் இந்த ரயில், சென்னை அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு வந்து சேரும்.இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam