தஞ்சாவூர் அருகே ட்ரிபிள்ஸ் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்- 2 பேர் உயிரிழந்த பரிதாபம்
தஞ்சாவூர், 08 ஏப்ரல் (ஹி.ச.) தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(20), கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (21) இருவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் கடந்த 6 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் உள்ள நிரஞ்சன்(19) என்ற நண்பரின
விபத்து


தஞ்சாவூர், 08 ஏப்ரல் (ஹி.ச.)

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(20), கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (21) இருவரும் நண்பர்கள் ஆவர்.

இருவரும் கடந்த 6 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் உள்ள நிரஞ்சன்(19) என்ற நண்பரின்

வீட்டுக்கு இருசக்க வாகனத்தில் சென்றுள்ளனர்.

பின்னர் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி வந்துள்ளனர். அப்போது தென்னமநாடு அருகே வந்து கொண்டிருந்தபோது, தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை அவரவர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்ல வலது பக்கம் திரும்பியுள்ளது.

அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், திடீரென திரும்பிய பள்ளி வாகனம் மீது

இருசக்கர வாகனம் மோதியது. பயங்கரமாக மோதிய இந்த விபத்தில் பாண்டி, பிரபாகரன்

சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நிரஞ்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவமக்

கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்தின் பதைப்பதை பூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam