வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் மீது கல் வீச்சு தாக்குதல்- 2 பெண்கள் கைது
தெலுங்கானா, 08 ஏப்ரல் (ஹ.ச.) தெலுங்கானாவில் வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில்மீது சுமார் 30பேருக்கு மேற்பட்ட கொண்ட கும்பல் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் ஷம்ஷாபாத் அருகிலுள்ள திம்மாபூர் பகுதியில் நடைபெற்றது. சிகிந்த்ராபாத் இருந்த
T


தெலுங்கானா, 08 ஏப்ரல் (ஹ.ச.)

தெலுங்கானாவில் வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில்மீது சுமார் 30பேருக்கு மேற்பட்ட கொண்ட கும்பல் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் ஷம்ஷாபாத் அருகிலுள்ள திம்மாபூர் பகுதியில் நடைபெற்றது.

சிகிந்த்ராபாத் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரயில் திம்மாபூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் வந்தபோது, ரயில் பாதை அருகே மறைந்து இருந்த கும்பல் திடீரென கல் மழை பொழிந்தது.

இதனால் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்ததுடன், பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

அந்த நேரத்தில் காவலில் இருந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு கும்பலை பிடிக்க முயன்றனர்.

ஆனால், குற்றவாளிகள் போலீசார்மீதே எதிர்த்து தாக்க முயன்றதால் சூழ்நிலை பதற்றமாக மாறியது.

இதனால் கூடுதல் போலீஸ் படைகள் அழைக்கப்பட்டன.

பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல, போலீசார் சினிமா காட்சியை ஒத்த வகையில் பல கிலோமீட்டர் துரத்தினர்.

இருப்பினும் இருளை பயன்படுத்தி பெரும்பாலானவர்கள் தப்பிச் சென்றனர்.

ஆனால், கும்பலில் இருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் தாங்கள் ருத்ராட்ச மாலைகள் விற்க வந்ததாக கூறினாலும், அவர்களின் பதில்கள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கும்பல் பீகார், ஒடிசா, ராஜஸ்தான் பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது போலீசார் சிறப்பு குழுக்களுடன் தப்பியோடிய 30 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதல் பின்னணியில் பெரிய சதி உள்ளதா அல்லது திருட்டு நோக்கத்திலா நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும் நபர்கள் எவரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA