Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 08 ஏப்ரல் (ஹ.ச.)
தெலங்கானா மாநிலம் வனபர்த்தியில் பிஆர்எஸ் தலைவர் ஹரீஷ் ராவ் நடத்த இருந்த பொதுக்கூட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை அரசு திடீரென ரத்து செய்துள்ளது.
இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனபர்த்தி தொகுதிக்குட்பட்ட ரேவல்லி மண்டலத்தில் உள்ள கொள்ளப்பள்ளி நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிராக கடந்த 100 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 9ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக முன்பே போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இறுதி நேரத்தில் அரசு அனுமதியை ரத்து செய்தது.
இந்த முடிவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசு ஜனநாயக விரோதமான முறையில் செயல்படுகிறது என்றும், எதிர்க்கட்சியின் குரலை அடக்க முயற்சி நடைபெறுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நிரஞ்சன் ரெட்டி தெரிவித்தார்.
வழக்குகள் மற்றும் மிரட்டல்களுக்கு பிஆர்எஸ் அஞ்சாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA