மியாபூர் வரை மெட்ரோவில் சாதாரண பயணியாக சென்ற அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ்
தெலுங்கானா , 08 ஏப்ரல் (ஹ.ச.) தெலங்கானாவில் தனியார் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தெலங்கானா மாநில அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணாராவ் சாதாரண பொது மக்களை போல மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கவனம் பெற்றார்.
T


தெலுங்கானா , 08 ஏப்ரல் (ஹ.ச.)

தெலங்கானாவில் தனியார் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தெலங்கானா மாநில அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணாராவ் சாதாரண பொது மக்களை போல மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கவனம் பெற்றார்.

மெட்ரோ நிலையத்தில் எந்த பாதுகாப்பு பரபரப்பும் இன்றி, தானே டிக்கெட் வாங்கி மியாபூர் வரை பயணம் செய்தார்.

ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அமைச்சர் தனது பதவியைப் பொருட்படுத்தாமல் மற்ற பயணிகளுடன் நின்றபடியே பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பயணத்தின் போது அவர் சக பயணிகளுடன் சுலபமாக உரையாடி, மெட்ரோ சேவைகள் குறித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அமைச்சரை தங்களுடன் பார்த்த பயணிகள் ஆச்சரியமடைந்து, அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர். அதற்கு அவர் எளிமையாக ஒத்துழைத்து, அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில்,

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக இலக்கை அடைய மெட்ரோ சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாகவும் எல்பி நகர் முதல் கேபி எச் பி வரை இதேபோல் மெட்ரோவில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA