தென்காசியில் கள் இறக்கியதாக துப்பாக்கி சூடு- போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி..!
தென்காசி, 08 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை பனையில் இருந்து கள் இறக்கியதாக கூறி ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா நிகழ்விடத்துக்கு சென்று அவரை பிடிக்க சென்றார். அங்கே
துப்பாக்கி சூடு


தென்காசி, 08 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை பனையில் இருந்து கள் இறக்கியதாக கூறி ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா நிகழ்விடத்துக்கு சென்று அவரை பிடிக்க சென்றார்.

அங்கே மணிகண்டனுக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த காவல் அதிகாரி இசக்கி ராஜா பனைத் தொழிலாளி மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் காலில் காயம் ஏற்பட்டு தற்பொழுது மணிகண்டன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த பனைத் தொழிலாளியான மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பல்வேறு சமுதாயத்தை சார்ந்த அமைப்புகள் சார்பில் நள்ளிரவு வரையில் நேற்று காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மணிகண்டனின் அண்ணன் மகள் அளித்த புகாரின் பேரில் தற்பொழுது துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா உட்பட மேலும் இரு காவலர்கள் என மொத்தம் மூன்று காவலர்கள் மீது ஆலங்குளம் போலீசார் தற்பொழுது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P