Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 08 ஏப்ரல் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரை சேர்ந்த அலியார் என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
அதில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அவர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கடை ஊழியர்கள் கடையை அடைத்துவிட்டு சென்று விட்டனர்.
இன்று காலை கடை உரிமையாளர் கடையை திறப்பதற்காக வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் முன்பக்க கதவை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரில்
துளையிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் கொள்ளை கும்பல் நகைக்கடையின் முன்பக்கத்தில் இருந்த கதவை உடைத்தால் சி.சி.டி.வி. மூலம் மாட்டிக்கொள்வோம் என்று திட்டமிட்டு, பின்பக்க சுவரில்
துளையிட்டு உள்ளே நுழைந்து நகைகளை அள்ளிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மர்ம கும்பலை பிடிக்க வீரவநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர
தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் சுமார் 1/2 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று
கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P