துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிலைகளை உடைத்த பெண் உட்பட 3 பேர் மீது புகார்
திருச்சி, 08 ஏப்ரல் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம்.பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஒரு சில பணிகள் மட்டும் ம
Thuraiyur Police Station


திருச்சி, 08 ஏப்ரல் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம்.பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்பொழுது ஒரு சில பணிகள் மட்டும் முடிவு பெறாமல் இருந்தது. இந்நிலையில் கோவிலின் நுழைவாயிளில் உள்ள மண்டபத்தின் மீது சிவனின் வரலாறு கூறுவது போல சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெயலட்சுமி ஸ்ரீதர் நக்கீரன் உள்ளிட்ட சிலர் கோவிலில் பராமரித்து கொண்டும் ஒரு சில உழவாரப் பணிகளை மேற்கொண்டு இருந்து வருகின்றனர்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் என்றாலும் இந்த குறிப்பிட்ட நபர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே கோவிலை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோவிலின் முன் மண்டபத்தின் மீது அமைந்துள்ள சாமி சிலைகளுக்கு வர்ணம் பூச சில தனியார் அமைப்பினர அறநிலைய துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களிடம் அனுமதி கூறாமல் அறநிலையத்துறையிடம் அனுமதி கூறியதால் ஆத்திரத்தில் முன் மண்டபத்தின் மீது இருந்த சிலைகளை பெயர்த்து எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இது பற்றி கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பட்டப் பகலில் பிரசித்தி பெற்ற கோவிலின் சிலைகளை உடைத்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN