Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 08 ஏப்ரல் (ஹி.ச.)
திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் வேற்று மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு உள்ளூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வேட்புமனு
தாக்கல் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளான அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சியினர் பாதி பிரச்சாரத்தை முடித்து விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பிரச்சாரம்
இன்று காலை துவங்கியது.
அமைச்சர் முத்துசாமி தனது இல்லத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது கொடிகளை ஏந்தி பிரச்சாரத்தில் பங்கேற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் கொடிகளை கூட ஏந்தி வரவில்லை.
சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு கொடியை மட்டும் ஏந்தி கொண்டு பரிதாபமாக ஒரு
தொண்டர் வந்தார். நான்கைந்து நபர்கள் மட்டுமே கை சின்னம் பொருத்திய அட்டைகளை ஏந்தி வந்தனர்.
இதனால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பவரால் பொதுமக்களுக்கும் வேட்பாளர் யார் என்று அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P