Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 08 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது அவருடைய நான்காம் கட்ட பிரச்சார பயணத்திடம் வெளியிடப்பட்டுள்ளது
இது தொடர்பாக தி.மு.கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல்
பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்த தொடர் பிரச்சாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,
மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், நான்காம்
கட்ட பரப்புரையை ஏப்ரல் 10-ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்குகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பரப்புரையை தொடங்குகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.04.2026 (வெள்ளிக் கிழமை) தஞ்சாவூர்,திருவையாறு, ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற் கொள்கிறார்.
அதற்கு மறுநாளான சனிக்கிழமை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், விராலிமலை,புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை,
மானாமதுரை ஆகிய தொகுதிகளில் பரப்பரை மேற்கொள்கிறார்.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை
பரமக்குடி, பரமக்குடி, திருவாடானை, தூத்துக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர்
விளாத்திகுளம், தூத்துக்குடி,
திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம்,
கோவில்பட்டி தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P