கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
கடலூர், 08 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. ஆனால் விஜயின் பிரச்சாரம் திட்டமிடு
விஜய்


கடலூர், 08 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

ஆனால் விஜயின் பிரச்சாரம் திட்டமிடுவதும் பின்னர் ரத்து செய்வதும் தொடர்கதையாக இருந்தது.

இந்நிலையில் இன்று நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் ரோடு ஷோ மற்றும் பரப்பரை கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து நாளை தவெக சார்பில் கடலூரில் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம், வடலூர் நான்கு முனை சந்திப்பு, சேத்தியாத்தோப்பு நான்கு முனை சந்திப்பு, தொழுதுர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் கூட்டம் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜயின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து யாரும் வரக்கூடாது, கூட்டம் அதிகம் வருவதை தவிர்க்க வேண்டும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P