Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச)
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிடாத நிலையில், அத்தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முக்கிய தீர்மானம் எடுத்துள்ளனர்.
அதன்படி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த அனைத்து தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள், அண்டை தொகுதிகளான சேலம் மேற்கு மற்றும் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிகளில் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சித் தோழர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாக்குகளை, கட்சித் தலைவர் “தளபதி” அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறாரோ, அந்த வேட்பாளருக்கு திரட்ட வேண்டும் என பரிந்துரை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் விஜய் தமிழன் ஆ. பார்த்திபன் ஆகியோரிடம் வலியுறுத்தவும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ