வனத்துறை கெடுபிடியால் மலைகிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு...
தருமபுரி, 08 ஏப்ரல் (ஹி.ச.) மலைப்பகுதி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் வஜ்ஜரபள்ளம் மலைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மலைப்ப
தேர்தல் புறக்கணிப்பு


தருமபுரி, 08 ஏப்ரல் (ஹி.ச.)

மலைப்பகுதி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் வஜ்ஜரபள்ளம் மலைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

மலைப்பகுதிகளில் உள்ள சில கிராமங்களில், வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் வசித்து வரும் நிலங்கள் “பாதுகாக்கப்பட்ட காடு” என அறிவிக்கப்பட்டதால், விவசாயம் செய்யவும், வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தடைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், காடு சார்ந்த பொருட்களை சேகரிப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அவர்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கோரி பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், இந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தங்களின் நில உரிமையை உறுதி செய்து, வனத்துறை கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

Hindusthan Samachar / GOKILA arumugam