புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40% வாக்குப்பதிவு
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாடு, கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக இன்று (09.04.2026) கா
72.40% voter turnout recorded in Puducherry


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாடு, கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக இன்று (09.04.2026) காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளிலும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்காளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

பிற்பகல் 1 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40% சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக 1 மணி நிலவரத்தின்படி, புதுச்சேரியில் 56.83 சதவிகிதமும் 11 மணி நிலவரப்படி, 37.06 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியிருந்ததன.

மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் 82.2% வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b