Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக -நேயம் மக்கள் கழகம் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
புதுச்சேரி, காரைக்காலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 56.83 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அந்த வகையில் பாஜக மாநில செயலாளர் மோகன் குமார் வில்லியனூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது,
மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இங்கு இரட்டை என்ஜின் அரசை மக்கள் விரும்புகின்றனர்.
அனைவரும் ஒரு வளர்ந்த புதுச்சேரிக்காக வாக்களித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியைப் பெறவே பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b