Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோவிலில் வரும் சித்திரை 1ஆம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஊண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர் கோவிலில் இருந்து கொடிமரம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் முதல்வரும் திமுக வேட்பாளருமான ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கொடி மர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து பரமசிவன் கோவில் கிரிவல பாதையில் கொடிமரம் மலைக் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஓ பன்னீர்செல்வம் ஜுப்பில் கிரிவல பாதையில் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்று பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
போடி ஜமீன்தார் வடமலை சீல ராஜபாண்டியன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
Hindusthan Samachar / ANANDHAN