Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வலி நிவாரண மாத்திரைகள் விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் வைத்து சரவணன் என்ற நபரை கைது செய்தனர்.
இவரிடம் சில வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்ற விசரணை நடத்தியதில்
திரு வி க நகர் காமராஜர் நகர் 1வது தெருவை சேர்ந்த சரவணன் 30 என்பதும். ஏ ப்ளஸ் கேட்டகிரி சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரியவந்தது.
மேலும் இவரிடம் விசாரணை நடத்தியதில் இவரது மனைவி வினோதினியின் தங்கை தாரணி என்பவர் வீட்டில் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து எருக்கஞ்சேரி கைலாசம் தெரு பகுதியைச் சேர்ந்த தாரணி 27 என்பவர் வீட்டில் சோதனை செய்து போலீசார் மேலும் சில வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தாரணியையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த தனா என்கின்ற தணேஷ்குமார் 26 என்ற நபரை கைது செய்தனர்.
இவர் மீதும் மூன்று குற்ற வழக்குகள் உள்ளன.
மொத்தம் இவர்கள் மூன்று பேரிடமிருந்து 800 வலி நிவாரண மாத்திரைகள். 75 ஆயிரம் ரூபாய் பணம். 5 செல்போன்கள்.
மற்றும் 2 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் இவர்கள் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ