இந்தியாவின் கலாச்சார தூதர் சரண் ராணி பாக்லீவால் - ஜவஹர்லால் நேரு
சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.) சரண் ராணி பாக்லீவால் இந்துஸ்தானி சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார்.
ந


சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

சரண் ராணி பாக்லீவால்

இந்துஸ்தானி சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.

இவர் விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

1930ஆம் ஆண்டு முதல் மேடை கச்சேரிகளில் சரோட் வாசிக்க ஆரம்பித்தார்.

ஆண்கள் மட்டுமே வாசித்த சரோட் இசையில் இவரும் வல்லமை பெற்றார்.

இசைக்கலைஞர் என்ற வகையில் உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர்தான்.

இவர் இந்திய பாரம்பரியத்தை நிலைப்படுத்துவதற்காக அரிதான 450 வாத்தியங்களை சேகரித்து அதை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தேசிய கலைஞர், சாகித்ய கலா பரிஷத் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 'இந்தியாவின் கலாச்சார தூதர்' என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்டவர்.

'சரோட் ராணி' என போற்றப்பட்ட இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J