Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 09 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் வெங்கடேசன்
பாலமேடு, சின்ன பாலமேடு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பாலமேடு வாடிவாசல் பின்புறம் திமுகவை சேர்ந்த வேட்பாளர்
வெங்கடேசன், திமுக அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் திமுகவினர் கூட்டணி
கட்சி நிர்வாகிகள் என அனைவரும் தீவிரமாக மைக்கில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் நிர்வாகி ஒருவர் திறந்த வேனில் பிரச்சாரம் செய்து
கொண்டிருந்த பாலசுப்பிரமணியை அழைத்தபோது, உடனே அவரை திமுக நிர்வாகி அவரை மைக்கால் அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் சின்ன பாலமேடு பகுதியில் பிரச்சாரம் செய்ய சென்றபோது, அதே
நிர்வாகியிடம் பெண்கள் குடிதண்ணீர் பிரச்சனையை சரி செய்து தாருங்கள் பெண்கள்
சூழ்ந்து கொண்டனர்.
அப்போது பெண்கள் என்றும் பாரமல் அடிக்க பாய்ந்தார் அதே நிர்வாகி, இதனால் செய்வதறியாது தவித்த பெண்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam